சென்னையில் ‘காலா’ ஷூட்டிங்

Webdunia
புதன், 5 ஜூலை 2017 (17:51 IST)
வருகிற 10ஆம் தேதி முதல், சென்னையில் ‘காலா’ படத்தின் ஷூட்டிங் தொடங்குகிறது.
 
 
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் படம் ‘காலா’. தாதாவாக ரஜினி நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, மே மாதம் 28ஆம் தேதி மும்பையில் தொடங்கியது. அங்கு முக்கியமான காட்சிகளைப் படம்பிடித்த பா.இரஞ்சித், அடுத்த  ஷெட்யூலை சென்னையில் படமாக்குகிறார். இதற்காக, ஈவிபி பொழுதுபோக்குப் பூங்காவில் மும்பையின் தாராவி பகுதியைப்  போன்று செட் அமைக்கப்பட்டுள்ளது.
 
ஜூலை 10ஆம் தேதி முதல், இங்கு படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா  சென்றிருக்கும் ரஜினி, 12ஆம் தேதி முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். இந்தப் படத்தில் ஈஸ்வரி ராவ், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டில், சாக்‌ஷி அகர்வால் என 4 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்தப்  படத்தை, தனுஷ் தயாரிக்கிறார்.
அடுத்த கட்டுரையில்