முதல் முறையாக விளம்பரத்தில் டி ராஜேந்தர்… சிம்பு பகிர்ந்த வீடியோ!

vinoth

வியாழன், 7 ஆகஸ்ட் 2025 (13:25 IST)
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியர் என பலதுறைகளில் செயல்பட்டவர் டி ராஜேந்தர். அவரின் படங்கள் 80 களில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை செலுத்தின. அதன் பின்னர் அவர் அறிமுகப்படுத்திய அவரின் மகன் சிம்பு இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.

சில ஆண்டுகளாக சினிமாவில் இடைவெளி விட்டிருந்த டி ஆர் இடையில் உடல்நலக் குறைவு காரணமாக அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்தார். அதையடுத்து சமீபத்தில் கூலி படத்தில் ஒரு பாடலை பாடியிருந்தார். இந்நிலையில் டி ஆர் தற்போது முதல் முறையாக விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார்.

CRED கிரெடிட் கார்ட் சம்மந்தப்பட்ட விளம்பரம் ஒன்றில் தன்னுடைய ட்ரேட்மார்க் அடுக்குமொழி வசனம் பேசி நடித்துள்ளார். இந்த விளம்பரத்தில் VTV கணேஷும் நடித்துள்ளார். இந்த வீடியோவை சிம்பு தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்