ராம் கோபால் வர்மா படத்துக்கு திடீர் தடை – நீதிமன்றம் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (11:00 IST)
சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட அம்ருதா பிரனய் காதல் விவகாரத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படத்துக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த  பிரனய் குமார்,அம்ருதா தம்பதியினர் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டு தனியாக வாழ்ந்து வந்தனர். பிரனய் பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அம்ருதாவின் தந்தை மாருதிராவ் அவர்களின் திருமனத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லை. இந்தச் சூழலில் அம்ருதா கர்ப்பமடைய தம்பதிகள் இருவரும் மருத்துவப் பரிசோதனைக்காகக் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ம் தேதி மருத்துவமனைக்கு வந்தபோது மருத்துவமனைக்கு வெளியே பிரனயை, அம்ருதாவின் தந்தையால் அனுப்பப்பட்டகூலிப்படையைச் சேர்ந்த ஒருவர் வெட்டிச் சாய்த்தார். இந்த சமபவத்தில் அம்ருதாவும் காயமடைந்தார்.

இதையடுத்து கூலிப்படையைச் சேர்ந்தவரையும் அம்ருதாவின் தந்தையையும் காவல்துறை கைது செய்துள்ளது. அதன் பின்னர் நான்கு மாதத்தில் அம்ருதாவிற்கு ஆண்குழந்தை பிறந்தது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யபப்ட்டுள்ள நிலையில் அம்ருதாவின் தந்தை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஜாமீனில் வெளிவந்த மாருதி ராவ் ஹோட்டல் அறை ஒன்றில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கியது.

இந்த சாதி ஆணவக்கொலை சம்பவத்தை அடிப்படையாக வைத்து பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா திரைப்படம் ஒன்றை எடுத்து வந்தார். அதற்கு இப்போது நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்