ராம்கோபால் வர்மாவின் அடல்ட் திரைப்படத்தின் டீசர் இதோ:

Webdunia
வியாழன், 14 மே 2020 (18:07 IST)
ராம்கோபால் வர்மாவின் அடல்ட் திரைப்படத்தின் டீசர் இதோ:
சர்ச்சைக்குரிய ட்வீட்டுகள் மட்டுமின்றி சர்ச்சைக்குரிய திரைப்படங்களையும் இயக்குபவர் பிரபல தெலுங்கு பட இயக்குனர் ராம்கோபால் வர்மா என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவர் தற்போது ’கிளைமாக்ஸ்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்
 
இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகை மியா மல்கோவா என்பவர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். ரொமான்ஸ், கிளுகிளுப்பு, த்ரில் கலந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.
 
இருப்பினும் இந்த படத்தில் இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளின் அடிப்படையில் டீசரை வெளியிட்டு உள்ளார் இயக்குனர் ராம்கோபால் வர்மா. இந்த டீசரில் மியா மல்கோவாவின் அரைநிர்வாணம், முழு நிர்வாண காட்சிகள் உள்பட கிளுகிளூப்பான காட்சிகள் இருப்பதால் இது ஒரு அடல்ட் ஃபிலிம் திரைப்படம் என்பது உறுதியாகி உள்ளது. மேலும் வரும் 18ம் தேதி இந்த படத்தின் டிரெய்லரை வெளியிட போவதாக ராம்கோபால் வர்மா அறிவித்துள்ளார். இந்த படத்தின் டீசரை காண வாருங்கள்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்