விக்ரம் படத்திற்கு 'கோப்ரா’ டைட்டில் ஏன்? அஜய்ஞானமுத்து விளக்கம்

வியாழன், 26 டிசம்பர் 2019 (10:13 IST)
விக்ரம் நடித்து வரும் 56வது திரைப்படத்திற்கு 'கோப்ரா’ என்ற டைட்டில் வைத்தது ஏன் என்பது குறித்து அந்த படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார் 
 
இந்த படத்தில் உள்ள விக்ரம் கேரக்டருக்கும் 'கோப்ரா’ என்ற பாம்புக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் அந்த தொடர்பை ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ் வரை ரசிகர்கள் உணர முடியும் என்றும் அதனால்தான் இந்த படத்திற்கு 'கோப்ரா’ என்ற டைட்டில் வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார் 
மேலும் இந்த டைட்டில் பொதுவான ஒரு டைட்டிலாக இருப்பதால் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளுக்கும் இதே டைட்டிலை தான் தேர்வு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐம்பது சதவிகிதம் முடிந்து விட்டதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜனவரி இறுதியில் ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் அஜய் ஞானமுத்து கூறியுள்ளார் 
 
மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் ஜனவரி 26ஆம் தேதி வெளியாகும் என்றும் பாடல்கள் பிப்ரவரியில் வெளியாகும் என்றும் தற்போது மூன்று பாடல்கள் தயார் நிலையில் உள்ளது என்றும் இன்னும் இரண்டு பாடல்களை ஏ.ஆர்.ரஹ்மான் ஜனவரி இறுதிக்குள் கம்போஸ் செய்து கொடுத்து விடுவதாக வாக்குறுதி அளித்திருப்பதாகவும் அஜய் ஞானமுத்து அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்