835 கோடி ரூபாய் பட்ஜெட்… 600 நாட்கள் போஸ்ட் புரொடக்‌ஷன்… பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணம்!

vinoth

புதன், 15 மே 2024 (07:29 IST)
பாலிவுட் இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் மூன்று பாகங்களாக உருவாகும் ராமாயணம் சம்மந்தப்பட்ட படத்தில் ராமன் வேடத்தில் ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும்  ராவணன் வேடத்தில் கேஜிஎஃப் புகழ் யாஷும் நடிக்க, அனுமன் வேடத்தில் சன்னி தியோலும், சூர்ப்பனகை வேடத்தில் ரகுல் ப்ரீத் சிங்கும், கைகேயியாக லாரா தத்தாவும் நடிக்கின்றனர். இந்த படத்தை நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ் மற்றும் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன.

இந்த படத்தின் சில நாட்களுக்கு முன்னர் தொடங்கியது. ராமர் சீதாவாக ரன்பீர் கபூர் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்தன. இந்நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

படத்துக்கு சுமார் 835 கோடி ரூபாய் பட்ஜெட் திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் படத்தில் இடம்பெறும் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக 600 நாட்கள் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் சொலல்ப்படுகிறது. படத்தின் முதல் பாகம் 2027 ஆம் ஆண்டு தான் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்