யாஷின் ‘டாக்ஸிக்’ படத்தில் இணையும் வலிமை பட பிரபலம்!

vinoth

ஞாயிறு, 12 மே 2024 (16:52 IST)
யாஷ் நடிப்பில் கே ஜி எஃப் 2 ரிலிஸாகி கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் ஆகவுள்ள நிலையில் இன்னும் தனது அடுத்த படத்தின் ஷூட்டிங்கை யாஷ் தொடங்கவில்லை. இது அவரது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் அவர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் டாக்ஸிக் என்ற படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. கேவிஎன் ப்ரடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கே ஜி எஃப் மற்றும் கேஜிஎப் 2 ஆகிய இரண்டு படங்களை அடுத்து யாஷ் நடிக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க நடிகை நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. கதை கேட்ட அவர் படத்தில் நடிக்க சம்மதித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அவர் படத்தில் யாஷின் சகோதரி வேடத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் மற்றொரு முக்கிய வேடத்தில் நடிக்க பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்