ராமன் சீதையாக ரன்பீரும் சாய் பல்லவியும்… ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான புகைப்படங்கள்!

vinoth

திங்கள், 29 ஏப்ரல் 2024 (07:55 IST)
பாலிவுட் இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் ராமாயணம் சம்மந்தப்பட்ட படத்தில் ராமன் வேடத்தில் ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும்  ராவணன் வேடத்தில் கேஜிஎஃப் புகழ் யாஷும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

மேலும் அனுமன் வேடத்தில் சன்னி தியோலும், சூர்ப்பனகை வேடத்தில் ரகுல் ப்ரீத் சிங்கும், கைகேயியாக லாரா தத்தாவும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இந்த மாதத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கியதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போது படப்பிடிப்புத் தளத்தில் சில புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றுள்ளன. இந்த படத்தில் ராமர் சீதை வேடத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்