வடகொரியாவுடன் அணு ஆயுத போர்; சீனாவுடன் வர்த்தக போர்: டிரம்ப்பின் நோக்கம் என்ன?
வெள்ளி, 23 மார்ச் 2018 (17:27 IST)
அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவி ஏற்றது முதல் அமெரிக்கா, அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்ற கொள்கையை கடைப்பிடித்து வருகிறார். இதனால் உலக நாடுகள் மத்தியில் அதிருப்தியை சம்பாதித்து வருகிறார்.
அமெரிக்க பொருட்களுக்கு சீனாவில் 25 % சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. ஆனால் சீன பொருட்களுக்கு அமெரிக்காவில் 2.5% வரி விதிக்கப்படுகிறது. இது நியாமான வர்த்தகம் அல்ல என்று சமீபத்தில் ட்ரம்ப் கூறியிருந்தார்.
இந்நிலையில், அமெரிக்காவில் சீன பொருட்களுக்கான வரியை அமெரிக்க அதிபர் சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் அளவில் வரி விதித்துள்ளார். இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மேலும், இந்த முடிவு கைவிடப்பட வேண்டும் எனவும் சீனா கோரிக்கை வைத்துள்ளது. மேலும், டிரம்பின் இந்த முடிவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்க பொருட்களுக்கு மூன்று பில்லியன் டாலர்கள் வரை வரி விதிக்க போவதாக சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் வடகொரியாவுடன் அணு ஆயுத போரில் ஈடுப்பட்டு வந்த அமெரிக்கா தற்போது சீனாவுடன் வர்த்தக்க போரில் ஈடுபட்டு வருவதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.