ஜப்பான் படத்தின் தோல்விக்குக் காரணம் என்ன?... முதல் முறையாக மனம்திறந்த ராஜுமுருகன்!

vinoth

புதன், 11 டிசம்பர் 2024 (07:44 IST)
குக்கூ, ஜோக்கர் ஆகிய திரைப்படங்களை இயக்கிய ராஜு முருகன், தோழா, மெஹந்தி சர்க்கஸ் ஆகிய திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். அதையடுத்து அவர் ஜீவாவை வைத்து இயக்கியுள்ள ஜிப்ஸி திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இதையடுத்து அவர் கார்த்தியின் 25 ஆவது படமான ஜப்பான் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆன அந்த படம் கார்த்தியின் சினிமா வாழ்க்கையில் மிக மோசமான தோல்வியைப் பெற்றது. ஜப்பான் படத்தைப் பார்த்த ரசிகர்கள் கார்த்தியின் நடிப்பையும், ராஜு முருகனின் திரைக்கதையையும் கழுவி ஊற்றினர்.

இந்நிலையில் தற்போது ஜப்பான் படம் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார் ராஜுமுருகன். அதில் “கார்த்தி சார் என் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஆசைப்பட்டார். அவருக்காக நான் ஒரு கதை சொன்னேன். ஆனால் அந்த கதை அவருக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. இதற்கிடையில் நான் எழுதியிருந்த ஜப்பான் கதை தயாரிப்பாளர் மூலமாக கார்த்தி சாருக்கு தெரிந்து, அந்த கதையைப் பண்ணலாம் என்றார்.

ஆனால் அப்போதிருந்த ஜப்பான் கதை வேறு மாதிரியான ஒரு கதை. அதனால் அதை கார்த்தி சாருக்காக நிறைய மாற்றங்கள் செய்தேன். அதனால் கதை அதுவாக ஒன்றாக உருவாகியது. அது ஒரு வழக்கமான கமர்ஷியல் படமாகி விட்டது. ஆனாலும் கூட அதில்  சில விஷயங்கள் உள்ளன. அதைக் கட்டுடைப்பு செய்து பேசலாம்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்