மாநகரம், கைதி ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய் மற்றும் கமல் ஆகியோர் நடிப்பில் மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களை இயக்கினார். இந்த இரு படங்களின் வெற்றி அவரை மோஸ்ட் வாண்டட் இயக்குனராக்கியது.
சமீபத்தில் மீண்டும் விஜய்யின் லியோ படத்தை இயக்கிய லோகேஷ் ரஜினி நடிப்பில் உருவாகும் கூலி படத்தை இயக்குகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்து அவர் கைதி 2 படத்தை இயக்குவார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவர் சமீபத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கானை சந்தித்து பேசியுள்ளார். அப்போது இருவரும் இணந்து படம் பண்ணுவதற்கான பேச்சுவார்த்தை நடந்ததாக சொல்லப்படுகிறது.