திருக்கார்த்திகை பிரதோஷம்; சதுரகிரி செல்ல அனுமதி தந்த வனத்துறை! - மகிழ்ச்சியில் பக்தர்கள்!

Prasanth Karthick

செவ்வாய், 10 டிசம்பர் 2024 (08:24 IST)

கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமிக்கு சதுரகிரி சுந்தரமகாலிங்கசுவாமி கோயிலுக்கு செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

 

சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி! ஆனால் ஒரு நிபந்தனை..
 

விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயிலில் பிரதோஷம், பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் சென்று வழிபடுவது வழக்கமாக உள்ளது. இந்த கோவில் மலைப்பகுதியில் இருப்பதால் மாதம்தோறும் இங்கு செல்ல வனத்துறை சில நாட்களுக்கு மட்டும் அனுமதி அளித்து வருகிறது.

 

இந்நிலையில் இந்த கார்த்திகை மாதத்தில் திருகார்த்திகையில் வரும் பிரதோஷ தினம் சிவபெருமானுக்கு சிறப்பு வாய்ந்த தினமாக உள்ளது. அதனால் பக்தர்கள் நிறைய பேர் சதுரகிரி வருவார்கள் என்பதால் டிசம்பர் 13 முதல் 16ம் தேதி வரை சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

 

மலை ஏறும் பக்தர்கள் இரவில் மலை மீது தங்க அனுமதி கிடையாது. தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்