கீர்த்தி சுரேஷுக்கு கேக் ஊட்டிய ரஜினி! – தேசிய விருதுக்கு வாழ்த்து!

Webdunia
புதன், 25 டிசம்பர் 2019 (15:32 IST)
சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றுள்ள கீர்த்தி சுரேஷுக்கு ’தலைவர் 168’ படக்குழு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது.

பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை மையமாக கொண்டு தெலுங்கில் உருவான படம் ’மாகாநடி’. இந்த படத்தில் சாவித்ரி கதாப்பாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். அவரது சிறப்பான நடிப்புக்காக தற்போது சிறந்த நடிகைக்கான தேசிய விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நடந்த விருது வழங்கும் விழாவில் விருதினை பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். விருது பெற்ற கீர்த்தி சுரேஷுக்கு தலைவர் 168 பட குழுவினர் வாழ்த்துக்கள் தெரிவித்து கேக் வெட்டி கொண்டாடினர். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷுக்கு கேக் ஊட்டி விட்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவ ரஜினி ரசிகர்களும் கீர்த்தி சுரேஷுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்