சென்னை திரும்பும் வழியில் ஜார்கண்ட் கவர்னரை சந்தித்த ரஜினிகாந்த்.. வைரல் புகைப்படம்..!

Webdunia
வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (11:35 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இமயமலையிலிருந்து இன்று சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் வரும் வழியில் அவர் ஜார்கண்ட் மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் வெளியாவதற்கு முந்தைய நாள் அவர்  இமயமலை சென்றார் 
தனது நண்பர்களுடன் அவர் இமயமலையில் இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரல் ஆகி வந்தன
 
 இந்த நிலையில் இமயமலையிலிருந்து சென்னை திரும்பும் ரஜினிகாந்த் வழியில் ஜார்கண்ட் மாநில கவர்னர் சிபி ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்து பேசி உள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன
 
 ரஜினிகாந்த் சென்னை திரும்பியதும் ‘ஜெயிலர் பட குழுவினரை சந்தித்து  வெற்றி விழாவை கொண்ட திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்