அதிமுக மாநாட்டிற்கு ஜெயிலர்’ டிக்கெட்டை வழங்கி அழைப்பு.. ரஜினி ரசிகர்களை கவரும் கடம்பூர் ராஜு
புதன், 16 ஆகஸ்ட் 2023 (13:02 IST)
மதுரையில் அதிமுக மாநாடு நடைபெற இருக்கும் நிலையில் இந்த மாநாட்டிற்கு ரஜினி ரசிகர்களை ஜெயிலர் படத்தின் டிக்கெட் கொடுத்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக பதவி ஏற்ற பின்னர் மதுரையில் வரும் இருபதாம் தேதி அதிமுக மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக அழைப்புகள் அடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோவில்பட்டி சத்தியபாமா திரையரங்கில் ஜெயிலர் காலை காட்சியை மொத்தமாக முன் பதிவு செய்த அமைச்சர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அந்த டிக்கெட்டுகளை ரஜினி ரசிகர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்.
ஜெயிலர் படத்தை பார்த்துவிட்டு அதன் பின்னர் அதிமுக மாநாடு வரவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்து வருகிறார். அவரது நூதனமான இந்த முயற்சி ரஜினி ரசிகர்களை கவர்ந்துள்ளது.