ரஜினியின் ஜெயிலர் ஷூட்டிங் முடிவது எப்போது? ரிலீஸ் எப்போது?

Webdunia
வியாழன், 22 டிசம்பர் 2022 (09:04 IST)
ஜெயிலர் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்தாலும் அடுத்த ஆண்டு மார்ச் இறுதியில்தான் மொத்த ஷூட்டிங்கும் முடியுமாம்.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்துக்கு டைட்டில் ”ஜெயிலர்” என்று வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ரஜினியோடு தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களை தவிர ரம்யா கிருஷ்ணன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் சிவகுமார் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் இப்போது நடந்து வருகிறது.  இந்நிலையில் ஷூட்டிங் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் ரஜினி ஒரு நாளைக்கு சுமார் 3 மணிநேரம் வரைதான் நடிக்கிறாராம். அதனால் ஷூட்டிங் அதிக நாட்கள் எடுத்துக் கொள்வதாக சொல்லப்படுகிறது. மேலும் படம் ஏபரல் 14 ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்படும் தகவல்களில் உண்மை இல்லை என சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்