ரஜினியை விட உயர்வான நடிகர் யாருமில்லை; சொல்வது யார் தெரியுமா?

Webdunia
புதன், 12 அக்டோபர் 2016 (11:43 IST)
கபாலி படத்தின் மூலம் ரஜினிக்கு ஜோடியாக குமுதவள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் இதயத்தை கவர்ந்தவர் நடிகை ராதிகா ஆப்தே. சர்ச்சைகளுக்கும் பெயர் போன இவர் சமீபத்தில் கர்நாடக தலைநகர் பெங்களூரில், 'அமீகோ' எனப்படும், உடல்நலம் தொடர்பான மொபைல், 'ஆப்' வெளியீட்டு விழாவில், நேற்று பங்கேற்றார்.


 


பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ரஜினி குறித்து ராதிகா ஆப்தே நினைவு கூர்ந்தார். ரஜினியுடன் கபாலி பட அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
 
அதனை தொடர்ந்து பேசிய ராதிகா ஆப்தே, ரஜினியை விட உயர்வானதொரு நடிகர் எவருமில்லை. சினிமாவில் நடிப்பு மீதான அவரின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, நேர்மை இவற்றின் மொத்த உருவம் ரஜினி எனலாம் என்றார். மேலும் ஷூட்டிங்கின் போது மொழி தெரியாமல் சிரமப்பட்ட நேரங்களில் ரஜினி தான் மொழி பெயர்த்து உதவி செய்தார் என்றும் கூறியுள்ளார். அவருடன் சேர்ந்து நடித்தது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது என்றும் கூறினார்.
அடுத்த கட்டுரையில்