இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக ரஜினிகாந்த்- லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ள கூலி படம் இன்னும் 6 நாட்களில் ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், அமீர்கான், உபேந்திரா மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் தற்போது ப்ரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே நேற்று இந்த படம் சென்சார் செய்யப்பட்டு A சான்றிதழ் பெற்றுள்ளது. இந்த படம் 2 மணிநேரம் 50 நிமிடம் ஓடும் படமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படம் சுமார் 350 கோடி ரூபாயில் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்துக்கான முன்பதிவு சில நாட்களுக்கு முன்னர் தொடங்கிய நிலையில் தற்போது வரை 50 கோடி ரூபாய் வரை முன்பதிவின் மூலமாகவே வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. படத்துக்கு தென்னிந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால் வட இந்தியாவில் படத்துக்கான முன்பதிவு மந்தமாகவே உள்ளதாக சொல்லப்படுகிறது.