ஆனால் இந்த படமும் கைவிடப்பட்டு விட்டதாகவும், அதற்கு முக்கியக் காரணம் இந்த படத்தின் பட்ஜெட் அதிகமானதுதான் என்று அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இந்த படம் குறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் இயக்குனர் வெற்றிமாறன் பேசியுள்ளார். அதில் “இந்த படத்துக்கான ப்ரமோஷன் வீடியோ விரைவில் வெளியாகும். மேலும் ஷூட்டிங் சீக்கிரமே தொடங்கும்” எனத் தெரிவித்துள்ளார்.