ஈகோ பார்க்காமல் வடிவேலுவை மனம்திறந்து பாராட்டிய ஷங்கர்!

vinoth

திங்கள், 11 ஆகஸ்ட் 2025 (14:22 IST)
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் பஹத் பாசிலுக்கு மலையாள மொழி தாண்டியும் ரசிகர்கள் ஏராளம். அவரின் படங்கள் தமிழகத்திலும் சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்நிலையில் அவர் தமிழில் முதல் முதலாக கதாநாயகனாக ‘மாரீசன்’ திரைப்படம் கடந்த மாத இறுதியில் ரிலீஸானது.

இந்த படத்தில் அவருடன் முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மலையாள இயக்குனர் சுஜித் சங்கர் இயக்க, சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது. இந்த படத்துக்கு ரிலீஸுக்கு முன்பு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. ரிலீஸுக்குப் பிறகு நல்ல விமர்சனங்கள் கிடைத்தும் வசூல் ரீதியாக இந்த படம் பெரிய வெற்றியை ஈட்டவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

இந்நிலையில் இந்த படம் பற்றி இயக்குனர் ஷங்கர் பாராட்டி தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “வடிவேலு அவர்களின் திரை வெளிப்பாடு, படத்துக்கு ஆழத்தையும் பலத்தையும் கொடுத்தது. அவர் உடைந்து உருகும் அந்த தருணம்… ஆஹா அவர் ஒரு அற்புதமான நடிகர் என்பதைக் காட்டிவிட்டார். பஹத் பாசில் மீண்டும் ஒரு பாராட்டுக்குரிய நடிப்பைக் கொடுத்துள்ளார். இயக்குனர் சுதீஷ் ஷங்கர் மற்றும் படக்குழுவினருக்குப் பாராட்டுகள்” எனக் கூறியுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் இம்சை அரசன் இரண்டாம் பாகம் உருவாக்கத்தின் போது வடிவேலுவுக்கும் ஷங்கருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது. இது சம்மந்தமாக வடிவேலு பொது வெளிகளில் ஷங்கரை விமர்சித்தும் பேசியிருந்தார். ஆனால் அதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் ஷங்கர் வடிவேலுவின் நடிப்பைப் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்