ரஜினியால் தள்ளிப்போகும் அஜித்தின் விடாமுயற்சி ரிலீஸ்!

vinoth
திங்கள், 8 ஏப்ரல் 2024 (07:28 IST)
ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் இப்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் பூஜை சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்தது. முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர்.

படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரம் மற்றும் திருநெல்வேலியில் நடக்க, இரண்டாம் கட்ட ஷூட்டிங் மும்பையில் படமாக்கப்பட்டது. அங்கே அமிதாப் பச்சன் நடிக்கும் காட்சிகளை படமாக்கியுள்ளது படக்குழு. அதையடுத்து இப்போது சென்னையில் இந்த படத்தின்  பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன.

இன்னும் சில நாட்களில் மொத்த ஷூட்டிங்கும் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வேட்டையன் திரைப்படம் அக்டோபரில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தை அக்டோபரில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாக அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார். இப்போது வேட்டையன் ரிலீஸால் விடாமுற்சி தீபாவளிக்கு அல்லது கிறிஸ்துமஸ் ரிலீஸுக்கு தள்ளிவைக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்