சென்னையிலேயே ரஜினி ஷூட்டிங் ஓவர் – ‘காலா’ அப்டேட்

Webdunia
சனி, 15 ஜூலை 2017 (11:19 IST)
‘காலா’ படத்தில், ரஜினி சம்பந்தப்பட்ட போர்ஷன்கள் அனைத்தும் சென்னையிலேயே படமாக்கப்பட உள்ளன.
 
 
பா.இரஞ்சித் இயக்கிவரும் ‘காலா’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. மும்பையில் வாழும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தாதாவாக ரஜினி நடிக்கிறார். எனவே, மே மாதம் 28ஆம் தேதி மும்பையில் ஷூட்டிங் தொடங்கியது. முதல் ஷெட்யூலை அங்கு  முடித்துவிட்டு, தற்போது இரண்டாவது ஷெட்யூலை சென்னை ஈவிபி பொழுதுபோக்குப் பூங்காவில் படமாக்கி வருகின்றனர். இதற்காகவே மும்பையின் தாராவி பகுதி போன்று இங்கு செட் போடப்பட்டுள்ளது.
 
கடந்த 10ஆம் தேதி தொடங்கிய படப்பிடிப்பில், 12ஆம் தேதி முதல் ரஜினி கலந்து கொண்டுள்ளார். ரஜினியின் போர்ஷன்கள்  அனைத்தும், இன்னும் இரண்டு மாதத்தில் இங்கேயே படமாக்கப்பட்டுவிடும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.  சென்னையில் படம்பிடித்த பிறகு, மறுபடியும் மும்பைக்குச் சென்று சில காட்சிகளை எடுக்கப் போகின்றனர். ஆனால், அதில்  ரஜினி இருக்க மாட்டாராம். இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கும் நானா படேகர், அடுத்த மாதம் முதல் சென்னை ஷூட்டிங்கில்  கலந்து கொள்கிறார்.
அடுத்த கட்டுரையில்