கனவா, நிஜமான்னு கிள்ளிப் பாத்துக்கிட்டேன்: கமல் குறித்து மனம் திறந்த ரஜினி

Webdunia
புதன், 7 நவம்பர் 2018 (13:55 IST)
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது.
நான் சினிமாவுக்குள்ளே வரும் போதே நடிகர் கமல், பெரிய நடிகரா இருந்தார். கிட்டத்தட்ட அன்றைக்கு அவர்தான் சூப்பர் ஸ்டார். டான்ஸ், ஆக்டிங் என எல்லா விஷயங்களிலும்  கமல் கலக்குவார்.  பெண்கள் மத்தியில் கமலுக்கு மிகப்பெரிய  கிரேஸ் இருந்துச்சு.
 
அதிலும் கமல், தமிழ்நாட்ட தாண்டி தென்னிந்தியா முழுவதும் பிரபல நடிகரா இருந்தாரு. அப்ப கமலோடு சேர்ந்து நடிச்சது மிகப்பெரிய விஷயம் எனக்கு. ஒருமுறை என்னை ஏற்றிக்கொண்டு செல்ல கார் வரவில்லை. அப்போது, கமல், அவர் செல்லும் காரில் என்னை ஏற்றிக்கொண்டார். எனக்கு ஒருமாதிரியாகிவிட்டது. கமல் எவ்ளோ பெரிய ஆக்டர். அவரோட நாம சேர்ந்து கார்ல போறாமா? இது கனவா, நிஜமான்னு கிள்ளிப் பாத்துக்கிட்டேன்.
 
அதுக்குப் பிறகு நிறைய படங்கள் பண்ணினேன். கடவுள் அருளால இந்த இடத்துக்கு வந்திருக்கேன். அதுக்காக, கமல் இடத்துக்கு வந்துட்டேன்னு நான் சொல்லிக்கமுடியாது. கமல் கமல்தான். அவரோட இடமே வேற!
 
இவ்வாறு ரஜினி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்