வெளிநாட்டுக்கு பறக்கப் போகும் தலைவர் 169 படக்குழு!

வெள்ளி, 11 மார்ச் 2022 (12:48 IST)
ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த திரைப்படமான தலைவர் 169 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சில வாரங்களுக்கு முன்னர் வெளியிட்டது. ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் இந்த திரைப்படத்தை நெல்சன் இயக்க உள்ளார் என்பதும் அனிருத் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினியோடு வடிவேலு நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இப்போது பீஸ்ட் படத்தின் ரிலிஸ் வேலைகளில் பிஸியாக இருக்கும் நெல்சன் பீஸ்ட் ரிலிஸூக்குப் பின்னரே ரஜினி படத்தைத் தொடங்குவார் என சொல்லப்படுகிறது. மேலும் திரைக்கதையை செப்பனிடும் பணிகளுக்காக அவர் ரஜினியிடம் 5 மாத காலம் அவகாசம் கேட்டுள்ளதாகவும், ஆகஸ்ட் மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் முதல் கட்ட படப்பிடிப்பு ஏதாவது ஒரு வெளிநாட்டில் நடக்க அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்