ரஜினியின் ‘ஜெயிலர்’ திரைப்படம்: இன்று காலை 11 மணிக்கு சூப்பர் அப்டேட்!

Webdunia
திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (08:13 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பை இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்போவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகயிருக்கும் திரைப்படம் ‘ஜெயிலர்’ 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்றும், விரைவில் இந்த படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொள்வார் என்றும் செய்திகள் வெளியானது.
 
இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் ‘ஜெயிலர்’ படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்றை இன்று காலை 11 மணிக்கு அறிவிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது 
 
இதனை அடுத்து ரஜினி ரசிகர்கள் அந்த அறிவிப்பு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்