சன் பிக்சர்ஸ் மேல் தனுஷ் அதிருப்தி… பின்னணி என்ன?

சனி, 20 ஆகஸ்ட் 2022 (15:40 IST)
தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றி தனுஷ் ரசிகர்களைக் குஷியாக்கியுள்ளது.

தனுஷ் நடிப்பில் அனிருத் இசையில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்த படம் உலகம் முழுவதும் நேற்று திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் படத்தின் எதிர்பாராத வெற்றியால் தனுஷ் மகிழ்ச்சியாக இருந்தாலும், ரிலீஸுக்கு முன்னர் படத்தின் மேல் நம்பிக்கை இல்லாமல் பாராமுகம் காட்டிய தயாரிப்பு நிறுவனமாக சன் பிக்சர்ஸ் மேல் அதிருப்தியில் உள்ளாராம். இதனால் சன் தொலைக்காட்சியில் நேர்காணலுக்கு கேட்ட போது கூட அதற்கு மறுத்துவிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்