2.0 அப்டேட்: ரஜினி ரசிகர்களை மகிழ வைத்த அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 19 அக்டோபர் 2018 (17:07 IST)

லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் படம் 2.o. ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அமீர்கான் ஏமி ஜாக்சன் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

2.0  படத்துக்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தின் சூட்டிங் பல மாதங்களுக்கு முன்பே முடிந்து விட்ட நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கிராபிக்ஸ் காட்சிகள் தத்ரூபமாக உருவாக்கப்பட்டு வருவதால் படம் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் ஒருவழியாக நவம்பர் இறுதியில் படம் வெளியாகும் என்று ஷங்கர் அறிவித்தார்.  சில வாரங்களுக்கு முன்பு படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.  இந்நிலையில் நாளை காலை 11 மணிக்கு 2.0 படத்தில்  இடம் பெற்றுள்ள இந்திர லோகத்து சுந்தரி பாடலின் லிரிக்ஸ் வீடியோ வெளியாகும் என லைகா நிறுவனம் அறிவித்து உள்ளது. இதே போல் படத்தில் அமீர்கான் கேரக்டர் பெயர்  ராஜாலி என்பதும் தெரிய வந்துள்ளது.
 


தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்