ரஜினி - ஏ.ஆர். முருகதாஸ் பட ஷூட்டிங் தள்ளிப்போக இதுதான் காரணமா?

Webdunia
புதன், 27 மார்ச் 2019 (13:07 IST)
பேட்ட படத்துக்குப் பின்னர் ரஜினி, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்தமாதமே தொடங்குவதாகத் திட்டமிட்டிருந்த நிலையில் தள்ளிப்போயிருக்கிறது. தள்ளிப்போனதற்கான காரணம் குறித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. 
 

 
லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படம், அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட இருக்கிறது என்று கூறப்படுகிறது. பேட்ட படத்தைட்த் தொடர்ந்து ரஜினியின் இந்த படத்துக்கும் அனிருத்தே இசைமையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடிப்பார் என்று சொல்கிறார்கள். படத்தின் ப்ரீ புரடக்‌ஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள ஏ.ஆர்.முருகதாஸ், விரைவில் நடிகர் - நடிகைகள் குறித்த விவரங்களை அறிவிப்பார் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். 
 
தனது முந்தைய படங்களான கத்தி, துப்பாக்கி போலவே ரஜினி படத்தின் ஒரு போர்ஷனை மும்பையில் படமாக்கத் திட்டமிட்டிருக்கிறாராம் முருகதாஸ். அதன்படி படத்தின் முதல் ஷெட்யூலை மும்பையில் தொடங்க இருக்கிறது படக்குழு. படத்தின் ஷூட்டிங் இம்மாத இறுதியிலேயே தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 10ல் தொடங்கும் என்கிறார்கள். தேர்தல் அறிவிக்கப்பட்டு நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், ஷூட்டிங்கிற்கான பணத்தைக் கொண்டுசெல்வதில் சிக்கல் ஏற்படலாம் என்று கருதியே படத்தின் ஷூட்டிங் தொடங்குவதில் தாமதம் என்கிறார்கள்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்