என்ன் ரஜினி விளம்பரங்களில் எல்லாம் நடித்துள்ளாரா? வைரலாகும் வீடியோ!

Webdunia
வெள்ளி, 6 நவம்பர் 2020 (11:35 IST)
நடிகர் ரஜினிகாந்த் 80 களில் வளர்ந்துவரும் நட்சத்திரமாக இருந்த போது நடித்த விளம்பர படம் ஒன்று இப்போது வைரலாகியுள்ளது.

நடிகர் ரஜினியும் கமலும் தமிழ் சினிமாவின் இரு பெரும் ஆளுமைகளாக இருந்தாலும் எந்த ஒரு பொருளின் விளம்பரங்களிலும் அவர்களைக் காணமுடியாது. இதற்கு முக்கியக் காரணம் தாங்கள் பயன்படுத்தாத ஒரு பொருளுக்கு விளம்பரம் செய்வதை அவர்கள் விரும்பவில்லை என சொல்லப்பட்டது.

ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்னர் கமல் போத்திஸ் மற்றும் ஹார்ப்பிக் ஆகிய பொருட்களின் விளம்பரங்களில் நடித்தார். ஆனால் ரஜினி அதுபோல எதுவும் நடிக்கவில்லை. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்னர் அவர் ஒரு கூல் டிரிங்ஸ் விளம்பரத்தில் நடித்துள்ளார். அது சம்மந்தமான வீடியோ காட்சிகள் இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்