ரஜினியின் ஒட்டுமொத்த சினிமா வாழ்க்கையில் தொடங்கப்பட்டு ரிலீஸ் ஆகாத 2 படங்கள்!

Webdunia
சனி, 24 செப்டம்பர் 2022 (08:56 IST)
ரஜினிகாந்த் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார்.

1975 ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் என்ற படத்தில் வில்லனாக அறிமுகமான ரஜினிகாந்த் தொடர்ந்து பல படங்களில் வில்லன் வேடங்களில் கலக்கி, குணச்சித்திர நடிகராகி பின்னர் கதாநாயகனாகி ஒரு கட்டத்தில் சூப்பர் ஸ்டாராகவும் மாறினார்.

தொடர்ந்து அவர் படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் வசூலில் கலக்கி, அவரை தயாரிப்பாளர்கள் முதல் ரசிகர்கள் வரை விரும்பத்தக்க ஒரு நடிகராக ஆக்கியது. இந்நிலையில் அவர் திரைவாழ்க்கையில் இதுவரை 169 படங்களில் நடித்துள்ளார்.

அவர் நடிப்பில் தொடங்கப்பட்டு முடிக்கப்படாமல் கைவிடப்பட்ட படங்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று 2000 க்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்ட ஜக்குபாய் மற்றும் 2011 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ராணா திரைப்படம். இந்த இரண்டு படங்களிலும் மேலும் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இந்த இரண்டு படங்களையும் இயக்க ஒப்பந்தம் ஆனது ரஜினியின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான கே எஸ் ரவிக்குமார் என்பதுதான்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்