ரி ரிலீஸாகிறது ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர் திரைப்படம்!

vinoth

புதன், 8 மே 2024 (07:34 IST)
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ராஜமௌலி இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு ரிலீஸான திரைப்படம் ஆர் ஆர் ஆர். சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் அமைந்த கதைக்களத்தில் இரு வரலாற்று பாத்திரங்களை கற்பனையாக ஒன்றிணைத்து இந்த படத்தை ராஜமௌலி உருவாக்கி இருந்தார்.

இந்தபடம் வெளியாகி திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. உலகம் முழுவதும் சுமார் 1000 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது. இந்த படத்தின் நாட்டு கூத்து பாடல் ஆஸ்கர் விருதை வென்று உலகளவில் புகழ்பெற்றது.

இந்நிலையில் இப்போது பல படங்கள் ரி ரிலீஸாகி சூப்பர் ஹிட்டாகி வரும் நிலையில் ஆர் ஆர் ஆர் படமும் இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வரும் மே 10 ஆம் தேதி முதல் ரி ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்