கில்லி படத்தில் விஜய்யின் நடிப்பை மகேஷ்பாபு ரசித்தார்… ஒக்கடு இயக்குனர் பகிர்ந்த தகவல்!

vinoth

திங்கள், 29 ஏப்ரல் 2024 (07:44 IST)
தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன கில்லி திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அதற்கு முக்கியக் காரணம் படத்தை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு மாற்றியிருந்தார் இயக்குனர் தரணி. 2004 ஆம் ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூலை செய்த படமாக கில்லி அமைந்தது. இந்த படத்தின் மூலம்தான் முதலாக த்ரிஷா விஜய் வெற்றிக் கூட்டணி அமைந்தது.

இந்த நிலையில் இந்த படம் வெளியாகிய 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த படத்தை ஏப்ரல் 20 ஆம் தேதி சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் ரி ரிலீஸ் செய்துள்ளது. படம் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட திரைகளில் ரி ரிலீஸ் செய்யப்பட்டு இந்த படம் இப்போது வரை 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கில்லி படம் குறித்து பேசிய ஒக்கடு இயக்குனர் குணசேகர் “கில்லி படத்தில் விஜய்யின் நடிப்பை மகேஷ்பாபு ரசித்தார். விஜய்க்கு ஏற்றவாறு இயக்குனர் தரணி செய்திருந்த மாற்றங்கள் சிறப்பாக இருந்தன. ஒக்கடு படத்தில் எனக்கும் மகேஷ்பாபுவுக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி போல விஜய்க்கும் தரணிக்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகி இருந்தது” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்