வைரமுத்துவிற்கு பயப்படும் ஆள் சின்மயி கிடையாது - ஏ.ஆர்.ரகுமான் சகோதரி

Webdunia
திங்கள், 22 அக்டோபர் 2018 (15:24 IST)
15 வருடங்கள் கழித்து கவிஞர் வைரமுத்து மீது சின்மயி பாலியல் புகார் கூறியிருப்பதை ஏற்க முடியாது என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ரேஹைனா தெரிவித்துள்ளார்.

 
இந்நிலையி, சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் “ வைரமுத்து மிகவும் பெரிய மனிதர். அவரை பற்றி எப்படி பேசுவது? ஆனால், அவரை பற்றி சில பாடகிகள் என்னிடமும் புகார் கூறியுள்ளனர். எனவே, உண்மை எது என தெரியவில்லை. அதேநேரம், பெண்கள் மீதான பாலியல் தொல்லை அனைத்து இடங்களிலும் இருக்கிறது. வைரமுத்துவை மட்டும் டார்கெட் செய்யக்கூடாது” என அவர் தெரிவித்துள்ளார்.

 
மேலும், ஒரு ஆண் தவறாக நடந்து கொண்டால் அந்த இடத்திலேயே பெண் பதிலடி கொடுக்க வேண்டும். 15 வருடங்கள் கழித்து வைரமுத்து பற்றி சின்மயி பேசியிருக்கிறார். கேட்டால் பயம் என்கிறார். ஒருமுறை மும்பை விமான நிலையத்தில் சின்மயியை ஒருவர் ‘மதராஸி’ என அழைத்துவிட்டார். சின்மயியும், அவரது தாயாரும் அந்த இடத்தையே ரணகளம் செய்து விட்டனர். எனவே, அவர்கள் யாருக்கும் பயப்படும் ஆட்கள் கிடையாது. எனவே, சின்மயி கூறுவதை ஏற்க முடியாது” என அவர் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்