சூப்பர் டேஸ்டில் முந்திரி பக்கோடா செய்வது எப்படி....?

தேவையான பொருட்கள்:
 
முந்திரி பருப்பு - 30
மிளகாய் வற்றல் - 4
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
அரிசிமாவு - கால் கப் 
கடலை மாவு - 1 கப்
எண்ணெய் - தேவைக்கேற்ப
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
 
முந்திரி பருப்பை நெய்யில் சிறு தீயில் வறுத்து உப்பு தூவி தனியாக வைக்கவும். பிறகு மிளகாய் வற்றல், உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, அரைத்த மசாலா, நெய் மற்றும் உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு  பிசைந்துக் கொள்ளவும்.
 
பின் கடாயில் எண்ணெய் ஊற்றி காயந்ததும் முந்திரியை ஒவ்வொன்றாக மாவில் தோய்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். பின் அதே எண்ணெயில் கறிவேப்பிலையை போட்டு பொரித்து எடுத்து முந்திரியின் மேல் தூவவும். இப்போது சுவையான முந்திரி பக்கோடா தயார். மாலை நேர உணவுக்கு மிகவும் ஏற்றது. சாப்பிடவும் மிகவும் சுவையானதாகவும் இருக்கும். செய்வது மிகவும் சுலபமானது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்