ரித்திகா சிங்: தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்றுள்ள ரித்திகா சிங்குக்கு, நடிப்பதென்றால் அவ்வளவு இஷ்டம். ‘படத்தில் நடிப்பது வித்தியாசமான அனுபவம். அதுவும், ராஜ்குமார் ஹிரானி படத்தில் நடிக்க அழைக்கும்போது யார் தான் மறுக்க முடியும்? அதைவிட என் சினிமா அறிமுகத்துக்கு சிறந்த படம் கிடைக்காது’ என்கிறார் ரித்திகா சிங்.
அப்படியானால், குத்துச்சண்டை அவ்வளவுதானா? ‘நிச்சயமாகக் கிடையாது. நான் ரோண்டா ரெளசியால் ஈர்க்கப்பட்டவள். அவர் குத்துச்சண்டை வீராங்கனையாக மட்டுமின்றி, சினிமாவிலும் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். அவரைப் போலவே இரண்டையும் பேலன்ஸ் செய்து கொள்வேன்’ என்கிறார் ரித்திகா சிங்.
ரகுல் ப்ரீத்சிங்: ஆச்சரியமான விஷயம், ரகுல் ப்ரீத்சிங் கோல்ஃப் பிளேயர் என்பது. அதுவும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார். அது, அவர் அப்பாவின் விருப்பம். ‘என்னவென்று தெரியாமல்தான் விளையாட ஆரம்பித்தேன். நாளாக நாளாக நன்கு கற்றுக்கொண்டு, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் அளவிற்கு முன்னேறினேன். 19 வயதில்தான் மாடலிங் செய்யத் தொடங்கினேன். அதுவரை தினமும் கோல்ஃப் விளையாடுவேன்’ என்கிறார் ரகுல்.