எனக்கு அது வராது: ரித்திகா சிங் ஓபன் டாக்!!

வெள்ளி, 14 ஏப்ரல் 2017 (11:55 IST)
இறுதிச் சுற்று படம் மூலம் நடிகையானவர் குத்துச் சண்டை வீராங்கனை ரித்திகா சிங். 


 
 
தற்போது ராகவா லாரன்ஸுடன் சேர்ந்து ரித்திகா நடித்துள்ள சிவலிங்கா படம் வெளியாகியுள்ளது. 
 
இந்நிலையில் படம் குறித்து  ரித்திகா கூறியதாவது, சிவலிங்கா படத்தில் என்னால் முடிந்த வரை சிறப்பாக நடித்துள்ளேன். பாடல் காட்சிகளில் கவர்ச்சி தேவைப்பட்டது. அதனால் அதற்கேற்ப நடித்தேன். 
 
எனக்கு டான்ஸ் ஆட தெரியாது. புடவை கட்ட தெரியாது. அதிலும் படத்தில் புடவை வேறு அணிந்து டான்ஸ் ஆடியது மிகவும் கஷ்டமாக இருந்தது.
 
எனக்கு வெட்கம் என்றால் என்னவென்றே தெரியாது. வெட்கப்படவும் வராது. எனக்கு திருமணம் நடக்கும்போது கூட மேடையில் வெட்கப் பட மாட்டேன் என்று ரித்திகா தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்