ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ் படத்தில் வில்லனாகும் இரண்டு முன்னணி நடிகர்கள்!

vinoth
சனி, 29 ஜூன் 2024 (11:46 IST)
லோகேஷ் கனகராஜ் கதை மற்றும் தயாரிப்பில் உருவாகும் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ திரைப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரெமோ மற்றும் சுல்தான் படங்களை இயக்கிய நிலையில் தற்போது மூன்றாவது படமாக பென்ஸ் படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்க உள்ளார்.

இந்த படத்தை முதலில் லோகேஷின் நண்பரான ரத்னகுமார்தான் இயக்க இருந்தார். ஆனால் அவர் லியோ மேடையில் ரஜினியைப் பற்றி பேசிய கருத்துகள் அதிருப்தியை ஏற்படுத்தியதால் ராகவா லாரன்ஸ் அவர் இயக்கத்தில் நடிக்க மாட்டேன் என சொல்லிவிட்டாராம். அதன் பின்னர் இயக்குனர் மாற்றம் நடந்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் வில்லன்களாக நடிக்க எஸ் ஜே சூர்யா மற்றும் பஹத் பாசில் ஆகிய இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்