என்னது... ‘சித்தி’ சீரியல் ஒளிபரப்பாகி 20 வருஷமாச்சா?

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2017 (21:06 IST)
ராதிகாவை பெண்களுக்கும் பிடிக்கவைத்த ‘சித்தி’ சீரியல் ஒளிபரப்பாகி 20 வருடங்கள் ஆகிவிட்டதாம்.

 
ராதிகா சரத்குமார் நடிகையாக அறிமுகமான வருடம் 1978. வித்தியாசமான கேரக்டர்களால் கவர்ந்த அவர், குறிப்பாக ஹீரோயினாக ஆண் ரசிகர்களைக் கவர்ந்தார். அவர், பெண்களையும் அடுத்த 10 வருடங்களில் கவர்ந்தார். காரணம், ‘சித்தி’ சீரியல்.
 
ராதிகா, சிவகுமார், பூவிலங்கு மோகன், யுவராணி, அஜய் ரத்னம் என பலர் நடித்த ‘சித்தி’ சீரியல், சன் டிவியில் ஒளிபரப்பானது. ‘கண்ணின்மணி கண்ணின்மணி நிஜம் கேளம்மா’ என்று தொடங்கும் இந்த சீரியலின் தீம் பாடலை, வைரமுத்து எழுதியிருந்தார். தினா இசையில், எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் நித்யஸ்ரீ மகாதேவன் இருவரும் பாடியிருந்தனர்.
 
சீரியல் உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய ‘சித்தி’ சீரியலை சி.ஜே.பாஸ்கர் இயக்க, ராதிகாவே சொந்தமாகத் தயாரித்தார். இந்த சீரியல் ஒளிபரப்பாக ஆரம்பித்து, கடந்த 20ஆம் தேதியுடன் 20 வருடங்கள் ஆகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்