அமேஸானில் ஒளிபரப்பாகும் ‘அருவி’

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2017 (20:06 IST)
சமீபத்தில் ரிலீஸான ‘அருவி’, விரைவில் அமேஸான் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாக இருக்கிறது. அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் கடந்த வாரம் ரிலீஸான படம் ‘அருவி’. அதிதி பாலன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த இந்தப் படத்தில், திருநங்கை அஞ்சலி வரதன் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். 

அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது இந்தப் படம். ‘அருவி’ படத்தை, பொங்கல் முதல் அமேஸான் பிரைம் வீடியோவில் பார்க்கலாம் எனத் தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு. இவர் தயாரித்து, கார்த்தி நடிப்பில் சில வாரங்களுக்கு முன்பு ரிலீஸான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தையும் தற்போது அமேஸானில் பார்க்க முடியும்.
 
தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் ‘மாயவன்’ படமும், ஜனவரி இறுதி வாரத்தில் இருந்து அமேஸானில் ஒளிபரப்பாக இருக்கிறது. ஆன்லைன் பைரசியைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதால், பெரும்பாலானவர்கள் அமேஸானுக்கு விற்று காசு பார்த்து விடுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்