சத்யராஜ், ஊர்வசி & RJ பாலாஜி நடிப்பில் ’வீட்ல விசேஷம்’… வெளியான சென்சார் தகவல்

Webdunia
செவ்வாய், 14 ஜூன் 2022 (09:43 IST)
R J பாலாஜி நடிக்கும் வீட்ல விசேஷம் படம் வரும் ஜூன் 17 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

வீட்டில் கல்யாண வயதில் மகன் இருக்கும்போது அவர்களின் அம்மா கர்ப்பமாவதால் ஏற்படும் பிரச்சனைகளே இந்த படத்தின் கதை. மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தில் ஆயுஷ்மான் குர்ரானா நடித்திருந்தார். இந்நிலையில் இப்போது இந்த படம் தமிழில் ரீமேக் ஆகியுள்ளது. முக்கியக் கதாபாத்திரங்களில் ஆர் ஜே பாலாஜி, ஊர்வசி மற்றும் சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ளார்.இந்த படத்துக்கு  வீட்ல விஷேசம் என்ற தலைப்பை வைத்துள்ளனர். படத்தின் டீசர், டிரைலர் ஆகியவை ஏற்கனவே வெளியாகி படத்தின் மீது எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன.

இந்நிலையில் ஜூன் 17 ஆம் தேதி படம் வெளியாவதை அடுத்து படக்குழுவினர் ப்ரோமோஷனுக்காக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தேவயானி நடிக்கும் புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் நடித்துள்ளனர். பட வெளியீட்டுக்கு முன்பு அவர்கள் நடித்த எபிசோட்கள் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகள் நடந்துகொண்டுள்ள நிலையில் படத்தின் சென்சார் தகவல் வெளியாகியுள்ளது. படத்துக்கு க்ளீன் U சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்