ஓடாத படத்துக்கெல்லாம் பார்ட் 2 வருது… மூக்குத்தி அம்மன் 2 வும் வரும் – ஆர் ஜே பாலாஜி பதில்!

Webdunia
சனி, 21 நவம்பர் 2020 (11:23 IST)
ஆர் ஜே பாலாஜி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தின் பார்ட் 2 ரிலிஸ் ஆகும் எனத் தெரிவித்துள்ளார் ஆர் ஜே பாலாஜி.

தீபாவளியை முன்னிட்டுதில் ஓடிடியில் ரிலிஸான மூக்குத்தி அம்மன் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படத்தில் நயன்தாரா மூக்குத்தி அம்மனாகவும், ஆர் ஜே பாலாஜி மற்றும் ஊர்வசி உள்ளிட்டோர் மற்ற கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர். ஆர் ஜே பாலாஜியுடன் இணைந்து என் ஜி சரவணன் இயக்கியிருந்தார். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முழுக்க முழுக்க காரணம் நயன்தாராதான் என்றால் அது மிகையாகாது.

இந்நிலையில் மூக்குத்தி அம்மன் வெளியாகி சில நாட்களிலேயே இதுவரை ஹாட்ஸ்டாரில் வெளியான அனைத்துப் படங்களின் பார்வைகளையும் தாண்டி முதலிடத்தில் உள்ளதாம். இந்நிலையில் இப்போது ஹாட்ஸ்டார் முகநூல் பக்கத்தில் நேரலையில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் மூக்குத்தி அம்மன் பார்ட் 2 பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அதில் ‘ஓடாத படத்துக்கெல்லாம் பார்ட் 2 எடுக்கிறார்கள். இரண்டாம் பாகம் கண்டிப்பாக எடுப்போம். அதற்காக 25 ஆம் பாகம் வரை எடுப்போமா எனத் தெரியவில்லை. 'எல்.கே.ஜி' படத்துக்குப் பிறகு 'யூ.கே.ஜி' படமா என்று பலரும் கேட்டார்கள். இப்போது உடனே எல்லாம் மூக்குத்தி அம்மன் கிடையாது. நல்ல ஐடியா கிடைக்கும் போது கண்டிப்பாக எடுப்போம். உண்மையில், 'மூக்குத்தி அம்மன் 2' எடுக்கும் எண்ணம் உள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்