தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி, சூதாட்டத்திற்கு தடை ...மீறினால் அபராதம்,சிறை
வெள்ளி, 20 நவம்பர் 2020 (20:25 IST)
தமிழகத்தில் சமீபத்தில் ஆன்லைன் சூதாட்டம் , ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த ஆன்லைன் விளையாட்டை தடை செய்யவுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
அதன்படி தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதுகுறித்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.
தடையை மீறி விளையாடினால் அவர்களுக்கு ரூ.5000 அபராதம் மற்றும் 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆன்லைன் ரம்பி விளையாட்டு அரங்கம் வைத்திருப்போருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் மற்றும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.