மல்டிபிளக்ஸ் நிறுவனமான பிவிஆர் திரையரங்குகளுக்கு மீண்டும் மீண்டும் பார்வையாளர்களை வரவழைக்க ரூ.699க்கு சந்தா சலுகை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்று முதல் அறிமுகமாகும் இந்த திட்டத்தின் மூலம் பார்வையாளர்கள் ஒவ்வொரு மாதமும் 10 திரைப்படங்களை ரூ.699க்கு பார்க்கலாம். ஆனால் அதே நேரத்தில் திங்கள் முதல் வியாழன் வரை மட்டும் பார்க்க முடியும்.