தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் லியோ. இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து, சஞ்சய்தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின் மற்றும் திரிஷா என முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
ஏற்கனவே இப்படத்தின் முதல் சிங்கில் நா ரெடிதான், 2 வது சிங்கில் படாஸுதான் ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் 3 வது சிங்கில் அன்பெனும் என்ற லிரிக் வீடியோ சமீபத்தில் ரிலீஸானது.
இந்த நிலையில், உலகம் முழுவதும் லியோ படம் பெரும் எதிர்பார்ப்புகள் ஏற்படுத்தியுள்ள நிலையில், இதன் விளம்பர மற்றும் புரமோசன் வேலைகள் நடந்து வருகிறது. இப்படம் லியோ படம் ஐமேக்ஸ் தொழில் நுட்பத்தில் வெளியிடவுள்ளதாக 7 ஸ்கிரீன் நிறுவனம் நேற்று தன் சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் லியோ வரும் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், இன்று சென்னையில் உள்ள சில தியேட்டர்களில் லியோ பட டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகிறது.
.
இதனால் ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.