செல்வராகவன் புதுப்பேட்டை 2 படத்தை கைவிட தனுஷ் காரணமா?

Webdunia
புதன், 5 ஜூன் 2019 (15:09 IST)
செல்வராகவன் புதுப்பேட்டை 2 குறித்த தனுஷிடம் பேசி பின்னர் படத்தை கைவிட்டதாக தெரிவித்துள்ளார். 
 
தமிழ் சினிமாவில் தனித்துவமான திறமை வாய்ந்த இயக்குனர்களில் முக்கியமானவர் செல்வராகவன். இவர் இயக்கிய படங்கள் எல்லாமே  சூப்பர் ஹிட். அதனாலே செல்வராகவன் படம் என்றாலே நம்பி திரையரங்கிற்கு செல்லலாம் என்ற ஒரு வித அதீத நம்பிக்கை ரசிகர்கள் மனதில் வேரூன்றியுள்ளது. 
 
அப்படி அவர் 6 வருடங்களுக்கு பின்னர் இயக்கிய படம்தான் என்.ஜி.கே. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் 2 மற்றும் புதுப்பேட்டை 2 பற்றி பேசியுள்ளார். 
அவர் கூறியதாவது, ஆயிரத்தில் ஒருவன் படத்தின் 2 ஆம் பாகம் கண்டிப்பாக வரும். அதற்கான ஸ்கிரிப்ட் ரெடியாகிவிட்டது. சோழர்கள் வரலாற்றை கூறும் கதையான இதன் 2 ஆம் பாகம் முதல் பாகத்தைவிட மிக அற்புதமாக அமைந்திருக்கிறது. 
 
கார்த்தி இல்லாமல் ஆயிரத்தில் ஒருவன் 2 எடுக்க முடியாது. அதுபோல் தனுஷ் இல்லாமல் புதுப்பேட்டை 2 எடுக்க முடியாது. புதுப்பேட்டை 2 குறித்து தனுஷிடம் பேசிய போது அவர், படத்தில்  சொல்ல வேண்டியதையெல்லாம் முதல்பாகத்திலேயே சொல்லியாச்சி. 2 ஆம் பாகத்தில் என்ன சொல்ல முடியும் என்று கேட்டார். சோ, புதுப்பேட்டை 2-விற்கான வாய்ப்பு இல்லை என தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்