கேஜிஎஃப் படத்துடன் போட்டிபோடும் புஷ்பா??

Webdunia
புதன், 7 ஜூலை 2021 (22:05 IST)
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா படம். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இப்படம் ரூ.250 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது, தெலுங்கு சினிமா மட்டுமின்றி இந்திய அளவில் இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் , பிரசாந்த் நீல்ஸ் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு கே.ஜி.எஃப்
சேப்டர் 1 என்ற படத்தில்  நடிகர் யாஷ் நடித்தார்.

இப்படம் இந்தியா மட்டுமின்றி உலகளவில் வசூலை வாரிக் குவித்தது. அதுமட்டுமின்றி பிரஷாந்த் நீல்ஸ் மற்றும் நடிகர் யாஷிற்கு மிகப்பெரிய ரசிகர் வட்டாரத்தை ஏற்படுத்தியது.

மேலும் கேஜிஎஃப் சேப்டர் 2 படம் ஜூலை 16 ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கொரொனா இரண்டாம் அலைப்பரவலால் தள்ளிபோகும் எனத் தகவல் வெளியாகிறது

இந்நிலையில் அல்லு அர்ஜூனின் புஷ்பா மற்றும் யாஷின் கேஜிஎஃப் சேப்டர் 2 ஆகிய இருபடங்களில் நேடியாக ஒரேநாளில் தியேட்டரில் ரிலீஸாகும் எனத் தெரிகிறது.

அப்படி இரு படங்களும் மோதுவது ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  இரண்டு படங்களும் பெரிய பட்ஜட் படங்கள் என்பதால் இப்படங்கள் இரண்டும் வெற்றியடைய வேண்டுமென ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்