புஷ்பா 2 பட ப்ரமோஷனுக்கு மட்டும் 100 கோடி ரூபாயா?... ஷாக் கொடுக்கும் படக்குழு!

vinoth

திங்கள், 28 அக்டோபர் 2024 (11:25 IST)
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான படம் புஷ்பா. இந்த படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தியா முழுவதும் ஒரு பிராண்ட்டாக மாறியது புஷ்பா 2 திரைப்படம். இந்நிலையில் அதன் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது.

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகின்றனர். தற்போது இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி படம் ரிலீஸாகிறது. படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் இந்த படம் பேன் இந்தியா ரிலீஸாக உருவாகவுள்ள நிலையில் படத்தை இந்தியா முழுவதும் கொண்டு சேர்க்கும் விதமாக படத்தின் ப்ரமோஷனுக்காக அல்லு அர்ஜுனிடம் 2 மாதங்கள் தேதியை வாங்கியுள்ளதாம் படக்குழு. மேலும் ப்ரமோஷனுக்காக மட்டும் சுமார் 100 கோடி ரூபாய் வரை செலவு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்