புஷ்பா 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து பாதியிலேயே வெளியேறினாரா ராஷ்மிகா?

vinoth
செவ்வாய், 9 ஜனவரி 2024 (09:01 IST)
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்தியா முழுவதும் ஒரு பிராண்ட்டாக மாறியது புஷ்பா 2 திரைப்படம். இந்நிலையில் அதன் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. அதன் படப்பிடிப்பு பல வெளிநாடுகளில் நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டாம் பாகத்தை சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இப்போது ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ராஷ்மிகா பாதியிலேயே வெளியேறி அனிமல் படத்தின் வெற்றிவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக ஒரு சர்ச்சை வெளியாகியுள்ளது. ஆனால் ராஷ்மிகா தரப்பு அவர் இயக்குனர் சுகுமாரிடம் அனுமதி பெற்று அதன் பிறகுதான் அனிமல் வெற்றிவிழாவுக்கு சென்றதாக விளக்கம் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்