பிக் பாஸ் வீட்டில் இந்த தயாரிப்பாளரா? அபிஷேக் பாடு திண்டாட்டம் தான்!

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (09:01 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 16 போட்டியாளர்களுடன் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த வாரம் ஒரு போட்டியாளர் வெளியேருவார் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் வைல்ட் கார்டு போட்டியாளராக நடிகை ஷாலு ஷம்மு வருவார் என்று கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது பிரபல தயாரிப்பாளர் ஒருவர் பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது 
 
பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன். இவர் கவின் நடித்த ’நட்புனா என்னன்னு தெரியுமா? உள்பட பல திரைப்படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பம் முதல் விமர்சனம் செய்து வருகிறார் என்பதும் இவரது விமர்சனத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ள அனைத்து அம்சங்களையும் முழுமையாக உணர்ந்த ரவீந்திரன் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றால் பிக்பாஸ் வீடு களைக்கட்டும் என்றும், அதேபோல் பிக்பாஸ் வீட்டில் அராஜகம் செய்து வரும் அபிஷேக்கிற்கு இனி திண்டாட்டம் தான் என்றும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றார்.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்