பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய இன்னொரு பெண் போட்டியாளர்

ஞாயிறு, 17 அக்டோபர் 2021 (09:30 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து இரண்டு வாரங்கள் முடிவடைந்துள்ள நிலையில் இன்று முதலாவது எலிமினேஷன் பிராசஸ் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
எலிமினேஷன் செய்யப்படுவதற்கு 15 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று வெளியேறுவது யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் குறைந்த வாக்குகள் வாங்கியதன் அடிப்படையில் அபிஷேக் ராஜா மற்றும் சின்னப்பொண்ணு ஆகிய இருவரில் ஒருவர் வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. 
ஆனால் எதிர்பாராத வகையில் திடீர் திருப்பமாக மலேசியாவை சேர்ந்த நாடியாசாங் என்பவர் இன்று எலிமினேட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பதை இன்று இரவு நிகழ்ச்சியை பார்த்து தெரிந்து கொள்வோம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்